ஜீப் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கடலூர் டிஎஸ்பி படுகாயம்

கடலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி-யாக இருப்பவர் ராமதாஸ். இன்று காலை சிதம்பரத்தில் இருந்து ஜீப்பில் கடலூருக்கு சென்றுக் கொண்டிருந்தார். ஜிப்பை காவலர் அருண்பாண்டியன் ஒட்டி சென்றுக் கொண்டிருந்த நிலையில், கடலூர் செம்மங்குப்பம் அருகே ஜீப் சென்றுக் கொண்டிருந்த போது குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதுவதைத் தவிர்ப்பதற்காக ஓட்டுநர் ஜீப்பை திருப்பி உள்ளார்.இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாகச் சென்று சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் டிஎஸ்பி ராஜேந்திரன், ஓட்டுநர் அருண்பாண்டியன் ஆகியோர் படுகாயம் அடைந்தார் . அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிச் சென்று இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






