முக்கிய வழக்குகளில் 6 ஆண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

May 8, 2024 - 07:19
 0  11
முக்கிய வழக்குகளில் 6 ஆண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

செங்கல்பட்டு குண்டூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ் (27). இவர், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விக்னேஷ் 8 வழக்குகளில் தொர்புடைய சரித்திரபதிவு குற்றவாளி என காவல் துறை தரப்பில் தெரிவித்தனர். கடந்த 2018 ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வரும் சரித்திரபதிவேடு குற்றவாளி விக்னேஷை கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காப்பாளர் சாய்பிரனீத் உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருப்பூரில் தலைமறைவாக இருந்த விக்னேஷை நேற்று கைது செய்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 6 ஆண்டுகளாக காவல் துறையினர் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்த காவல் துறையினரை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் பாராட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow