6 பேரிடம் 42 லட்சம் மோசடி
புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர் கென்னடி. இவர் அரசு வேலை வாங்கி தருவதாக ஆறு பேரிடம் ரூபாய் 42 லட்சம் மோசடி செய்துள்ளார். மேலும் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டபோது பணத்தை கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ரெட்டியார் பாளையம் போலீசில் புகாரை அடுத்து பல்நோக்கு ஊழியர் கென்னடியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
What's Your Reaction?