ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கி இளைஞர் தற்கொலை

செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரியைச் சேர்ந்த யுவராஜ்(27) என்பவருக்கு 6 மாத பெண்குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்த இவர், ஒரு மாதமாக வேலைக்கு செல்லாத காரணத்தினால், குடும்ப செலவுக்கு ஆன்லைன் ஆஃப் மூலம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
What's Your Reaction?






