சாலையில் தேங்கிய சகதியால் நாற்று நடப்பு போராட்டம்

காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி அருகே சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் இது நீடித்து வருவதால் பொதுமக்கள் சகதியில் நாற்று நட்டு சாலை அமைக்க கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். மேலும், ஊராட்சி தலைவர் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
What's Your Reaction?






