காதலால் நேர்ந்த சோகம்; கல்லூரி மாணவி தற்கொலை

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளும் இந்த கல்லூரியின் விடுதிகளில் தங்கி நர்சிங் படித்து வருகின்றனர்.இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பபிஷா (18), கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படித்து வந்த நிலையில் நேற்று காலை திடீரென கல்லூரி விடுதியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். பபிஷா கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதைப் கண்ட சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்தனர்.கீழே விழுந்த பபிஷாவை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் மாணவி பபிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக மாணவி பபிஷா உயிரிழந்தார். இது குறித்து நேரில் சரவணம்பட்டி போலீசார் காதல் விவகாரத்தில் மாணவி பபிஷா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






