ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று குறிக்கோளாக படித்து வந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தமிழரசு-ஆனந்தி என்னும் தம்பதி.நதியா (17) என்கிற மகள் மற்றும் யோகேஷ் (15) பிரவீன் குமார் (11) என்ற இரு மகன்கள் உள்ளனர்.தமிழரசு தாசிரியப்பனூர் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். மேலும் தமிழரசுக்கு முதல் மகள் நதியாவை மிகவும் செல்லப்பிள்ளையாக வளர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவருடைய வீட்டில் இவருக்கென தனி அறையும் உள்ளது. மேலும் நதியா திருப்பத்தூர் பகுதியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.இந்த நிலையில் நதியா தனது பெற்றோரிடம் சேலத்தில் நடக்கும் என்சிசி கேம்பிற்கு நான் செல்ல வேண்டுமென கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பெற்றோர் நீ செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.பின்னர் வழக்கம்போல நதியாவின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் சிக்கன் கடைக்கு சென்ற நிலையில் நதியாவின் பாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.என்சிசி கேம்பிற்கு செல்ல அனுமதி தராததால் மனமுடைந்த நதியா தன்னுடைய அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த நாற்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஐபிஎஸ் ஆக வேண்டும் என குறிக்கோளாக படித்து வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






