சினிமா பாணியில் சேஷிங் செய்து 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிரடி போலீசார்

சென்னை ஆவடியை அடுத்த வண்டலூர் மீஞ்சூர் ரிங்ரோட்டில் கஞ்சா கடத்தலை தடுக்க சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திர மாநில பதிவு எண்ணுடன் இரு கார்களை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் காரை சாலையோரம் நிறுத்துவது போல் நடித்து காரை நிறுத்தாமல் தப்ப முயன்றனர்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை 3 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்றனர். அப்போது வெள்ளசேரி அணுகு சாலையில் கார் மட்டும் நின்று கொண்டிருந்தது. போலீசார் காரை சோதனையிட்ட போது, அதில் 200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 20 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகமல்லிஸ் வர ராவ் (32) அங்கிருந்து தப்பியோடினார். தன்ராஜ் (28). நூனி (25) என்பவரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து வாங்கப்பட்ட முதல் ரக கஞ்சா சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விநியோகம் செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






