சட்டவிரோதமாக குட்கா விற்ற கடைக்கு சீல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, பாலக்கோடு காவல் நிலையத் தொகுதி காவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நந்தகோபால் தலைமையிலான குழுவினர் குத்தாலஅள்ளி, பாப்பநாயக்கன் அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் நேற்று (டிசம்பர் 13) தீவிர சோதனை நடத்தினார். அப்போது இரண்டு கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தாெடர்ந்து அவர்கள் கடை உரிமையாளர்களுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்தக் கடைகளிலிருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளை பூட்டி, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் சீல் வைத்தனர்.
What's Your Reaction?