தமிழகத்திற்கு என்னதான் ஆச்சு...?

வடமாநிலங்களைப் போலவே கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வன்முறை செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபமாக கடந்த 2 வருடங்களாக கஞ்சா புழக்கமும், போதைப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் லாரியில் மூட்டை மூட்டையாக மொத்தம் ரூ.2.5 கோடி மதிப்புள்ள 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரி மூலமாக கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்த ஓட்டுநர் உட்பட 3 பேரை கைது செய்தனர். தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் சோதனையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 845 கிலோ கஞ்சா மூட்டைகள் பிடிபட்டன.
What's Your Reaction?






