ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சங்கம் ஒன்றிணைந்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்

May 10, 2025 - 13:40
 0  46
ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சங்கம் ஒன்றிணைந்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்  வழங்கினர்

கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்த நிலையில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் காவேரி ஆற்றில் ஆழமான பகுதிகளான ஒகேனக்கல் பரிசல் துறை, நாகர்கோயில் காவிரி ஆறு முதலைப் பண்ணை , ஏத்த மடுவு, ஊட்டமலை பரிசல் துறை, நாடார் கோட்டை காவிரி ஆறு மற்றும் ஆலம்பாடி ஆகிய பகுதிகளில் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பணிகள் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக ஒகேனக்கல் காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் பல தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக ஐந்து மொழிகளில் எச்சரிக்கை பலகை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்தும் வருகின்றனர் இது மட்டுமில்லாமல் சுற்றுலா பணிகள் அதிகம் வரும் நாட்களில் ட்ரோன் மூலமாகவும் ஆபத்தான இடங்களில் சுற்றுலா பணிகள் குளிப்பதை தடுக்கும் விதமாக கண்காணித்து வருகின்றனர் மேலும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான ஒகேனக்கல் காவல்துறையினரும் மத்திய சமூக ஆர்வலர்கள் நலச்சங்கம் ஒன்றிணைந்து ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆழம் மிகுந்த ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் அவ்வாறு குளித்தால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தினர். இந்த நிகழ்வில் மத்திய சமூக ஆர்வலர்கள் நலச்சங்கம் உறுப்பினர்கள் மற்றும் ஒகேனக்கல் காவல்துறையினர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow