கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்

தருமபுரியை அடுத்த பழைய தருமபுரி எம்ஜிஆா் நகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கலையரசிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது அங்கு 2.250 கிலோ கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அதைப் பதுக்கி வைத்த பழைய தருமபுரியைச் சோ்ந்த ஓட்டுநா் சக்தி (28) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 17, 18 வயதுடைய 2 சிறுவா்கள் ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
What's Your Reaction?






