சீருடை சீட் பெல்ட் அணியவில்லையென 3 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த காவல் ஆய்வாளர்

May 25, 2024 - 04:22
 0  18
சீருடை சீட் பெல்ட் அணியவில்லையென 3 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த காவல் ஆய்வாளர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு பயணித்த காவலர் ஒருவர் பேருந்தில் பயண சீட்டு எடுக்காமல் பயணித்ததாக அந்தப் பேருந்து நடத்துனர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்பத்தியது.இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஓட்டுநர்கள் மீது விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள், அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், நேற்று வள்ளியூரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற மூன்று அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தார்.அப்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுனருக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதித்து அதற்கான ரசீதை ஓட்டுநர்களிடம் கொடுத்து அனுப்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow