தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நூதன மோசடி

Nov 30, 2024 - 10:14
 0  2
தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நூதன மோசடி

சென்னை எழும்​பூர், பெரு​மாள் ரெட்டி தெரு​வைச் சேர்ந்​தவர் வீரராகவன். லோடு ஆட்டோ ஓட்டிவரும் இவர், தனது மகளின் கல்விச் செலவுக்கு உதவு​மாறு சமூக வலைதளத்​தில் கோரிக்கை விடுத்திருந்​தார்.இதைப் பார்த்த இளைஞர் ஒருவர், கடந்த சில தினங்​களுக்கு முன் வீரராகவனை செல்​போனில் தொடர்பு கொண்டு, தனியார் தொண்டு நிறு​வனத்​திலிருந்து பேசுவதாக கூறி​யுள்​ளார்.

அதோடு உங்களது மகளின் மொத்த கல்விச் செலவை​யும் தொண்டு நிறு​வனம் ஏற்றுக்​கொள்​வ​தாக​வும், அதற்கு தொண்டு நிறு​வனத்​தில் உறுப்​பினராக வேண்​டும் என்று ஆசை வார்த்தை கூறி பல தவணை​களாக ஜிபே மூலம் ரூ.61,500 பெற்றுக் கொண்​டுள்​ளார். பின்னர், அவரது போன் இணைப்பு முற்றி​லும் துண்​டிக்​கப்​பட்​டது.

தான் ஏமாற்​றப்​பட்டதை உணர்ந்த வீரராகவன் இதுகுறித்து எழும்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். போலீஸ் விசாரணையில், வீரராகவனிடம் நூதன முறை​யில் பணம் பறித்தது வேலூர் மாவட்​டம், விருதம்​பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த தினேஷ் குமார் (35) என்பது தெரிய​வந்​தது. தலைமறைவாக இருந்த அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். பின்னர், நீ​தி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow