756 மது பாட்டில்கள் பறிமுதல்;
ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலத்தில், சந்தேகப்படும்படி கார் நிற்பதாக ஆத்தூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று காரை சோதனையிட்டனர். அதில் 756 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் குரும்பூர் சோழியக்குறிச்சியைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முருகன் என்பவர், புன்னக்காயலை சேர்ந்த ஒருவருக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார், முருகனை கைது செய்தனர். மேலும் காருடன் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
What's Your Reaction?