திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது;மருந்து மாத்திரைகள் பறிமுதல்

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி (வயது67), மலைச்சாமி(62) ஆகிய 2 பேரின் மருத்துவமனைகளில் திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10ம் வகுப்பு மட்டுமே படித்த துரைப்பாண்டி மருந்து, மாத்திரை கொடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.இதே போல் மலைச்சாமி முறையாக மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்ததையும் அதிகாரிகள் உறுதி செய்து அங்கிருந்து மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து துரைப்பாண்டி, மலைச்சாமி இருவரையும் சாணார்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதை அடுத்து இருவரையும் சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






