வட மாநில வாலிபர் கத்தியால் குத்தி கொலை;மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

May 15, 2024 - 21:43
 0  6
வட மாநில வாலிபர் கத்தியால் குத்தி கொலை;மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

திருப்பூர் கணியம்பூண்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஆகாஷ்குமார் (22). இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் நேற்று வழக்கம் போல் பணி முடிந்து தனது அறைக்கு சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்போனை பறிக்க முயன்றனர். ஆகாஷ்குமார் செல்போனை கொடுக்க மறுத்ததால், மூன்று பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, நண்பர்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகாஷ்குமார் இன்று காலை உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த சக வடமாநில தொழிலாளர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow