9 மாத குழந்தை பலி;செவிலியருக்கு 14 ஆண்டு சிறை

பிரிட்டன் குழந்தை பராமரிப்பு மையம் ஒன்றில் தூங்காமல் அடம்பிடித்த 9 மாத குழந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த செவிலியருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அந்த மையத்தில் கேத் ரஃப்லி என்ற செவிலியர் பெண் குழந்தையை அழுத்தமாக பிடித்து பீன் பேக் ஒன்றில் கட்டிப் போட்டு, அதன் மீது போர்வை ஒன்றையும் போட்டு மூடிவிட்டுச் சென்றதாக தெரிகிறது.சுமார் 90 நிமிட நேரம் அப்படியே விடப்பட்ட அக்குழந்தை மூச்சுத் திணறி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.விசாரணையின் போது, சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த நீதிபதிகள் மற்றும் நடுவர் குழுவினர் கண்ணீர் சிந்தி செவிலியருக்கு தண்டனை வழங்கினர்.
What's Your Reaction?






