பட்டப்பகலில் திமுக நிர்வாகி படுகொலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடுரோட்டில் நேற்று மாலை திமுக பிரமுகர் ஒருவரை மர்ம நபர்கள் 3 பேர் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவரை மர்ம நபர்கள் 3 பேர் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவரின் பெயர் தவிட்டுராஜ் (60) என்பதும், திமுகவின் கிளைச் செயலாளராக பதவி வகித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் முன்விரோதம் காரணமா திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?