2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்;வட மாநில வாலிபர் கைது

கோவை:கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கோவில்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர், கோவை சாலையில் உள்ள காபி கடை சந்திப்பு அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சவுதி பனாஃபா மகன் மோகன் (50) என்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் மோகனை ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






