வாலிபர் கொலை; போலீஸ் விசாரணை
திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் நேற்று காலை கண் மற்றும் கை கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி முதற்கட்ட விசாரணை தொடங்கினார். மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தாலுகா காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?