என் கூட பேசலன்னா உன் குழந்தைகளை கொன்னுடுவேன்'.. சொன்னதை நிறைவேற்றிய கொடூர கள்ள காதலன்
தருமபுரி மாவட்டம், முண்டாசுப்பறவடை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு தர்ஷன், யஸ்வந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும், பிரியாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகத் திருமணத்துக்குப் புறம்பானத் தொடர்பு இருந்தது.இந்நிலையில் பிரியா வெங்கடேசனிடம், "இனிமேல் நாம் பழகுவதை நிறுத்த வேண்டும். என் குழந்தைகளுக்காக வாழப் போகிறேன்" என்று கூறியுள்ளார். இதற்கு வெங்கடேசன் மறுப்பு தெரிவித்தார். பிரியா தனது முடிவில் உறுதியாக இருந்ததால் குழந்தைகளை கொன்று விடுவதாக வெங்கடேசன் மிரட்டினார். பிரியா கடைசி வரை தன் முடிவில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் இன்று பிரியா வீட்டிற்கு சென்ற வெங்கடேசன், இரு குழந்தைகளையும் யாருக்கும் தெரியாமல் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றார். பின்னர் முண்டாசுப்பறவடை பகுதி காட்டுப்பகுதியில் 2 சிறுவர்களை கொன்றுள்ளார்.ஊருக்குள் சென்றதும், இரண்டு சிறுவர்களையும், முகமூடி அணிந்த வடமாநில இளைஞர்கள் கடத்திச் சென்றதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். ஒரு கட்டத்தில், வெங்கடேசன் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் வெங்கடேசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது வெங்கடேசனுக்கும், குழந்தைகளின் தாயாருக்கும் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருந்ததும், இதற்கு இருந்த குழந்தைகளை கொன்றதும் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






