ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை; கொத்தனார் கைது

Apr 30, 2024 - 16:58
 0  8
ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை; கொத்தனார் கைது

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மைக்கேல் துரை பாண்டியன் (52).ரியல் எஸ்டேட் புரோக்கராக உள்ளார்.இவரது மனைவி பொன்மாலா (43). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இவர்களது வீட்டில் 3வது தளத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசி தாலுகாவை சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மைக்கேல் துரைபாண்டியனின் மனைவி பொன்மாலாவுக்கு வெங்கடேசனுடன் தகாத உறவு ஏற்பட்டு நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெங்கடேசனுக்கும் பொன்மாலாவுக்கும் பயங்கர தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், பொன்மாலாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதனால் அவர் சத்தம் போட்டதை கேட்டு அவரது மகன் வெங்கடேசனை பிடிக்க முயன்றபோது 2வது மாடி வழியாக ஏறி தப்பி ஓடினார். மைக்கேலும் அவரது மகனும் விரட்டி சென்று வெங்கடேசனை தாக்கியபோது தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த வெங்கடேசன், 2வது மாடியில் இருந்து மைக்கேலை கீழே தள்ளிவிட்டதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வெங்கடேசனை தேடி வந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி திரிந்த வெங்கடேசனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தகாத உறவில் கணவரை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow