உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கசாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சரோஜா உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்து சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 510 இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அதை மணப்பாறை வட்டாட்சியர அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
What's Your Reaction?