4 மாத குழந்தையை கொன்று புதைத்துவிட்டு நாடாகமாடிய காதல் தம்பதியர்

சிவகங்கை அருகே நாட்டாகுடியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (42). இவர் கோவையில் டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மஞ்சு என்பவரை (25) காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு முனீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தை இருந்தது.இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் மே 20 ஆம் தேதி சொந்த ஊரான நாட்டகுடிக்குச் சென்றனர். அங்கு மர்மமான முறையில் இறந்ததாகக் கூறி அவர்களது குழந்தையை, யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டதாக திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.புதைக்கப்பட்ட தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தை இறந்தது தெரியவந்தது.போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குழந்தை பிறப்பில் சந்திரசேருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரும், மனைவியும் சேர்ந்து குழந்தையை தரையில் தூக்கிப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர், மஞ்சு, அவர்களுக்கு உடந்தையாக இருந்த காளிமுத்து ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?






