மீன் பிடிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி

Mar 6, 2025 - 18:23
 0  5
மீன் பிடிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கொக்கரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவன்(58) விவசாயி.இவர் நேற்று காலை எருமையாம்பட்டி அருகே உள்ள கோழி மூக்கன் ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக, தனது பேரன் விக்கியை உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கு விக்கியை ஏரிக்கரையில் அமர வைத்துவிட்டு, சஞ்சீவன் ஏரியில் தண்ணீரில் இறங்கி வலை வீசி மீன் பிடித்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சஞ்சீவன் வெளியே வராததால், விக்கி உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் ஏரியில் இறங்கி தண்ணீரில் மூழ்கி நீச்சலடித்து பார்த்தபோதும், சஞ்சீவன் கிடைக்கவில்லை.இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஏரியின் தண்ணீரில் இறங்கி, சஞ்சீவன் சடலத்தை மீட்டனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow