கிணற்றில் மூழ்கி 2 குழந்தைகள் உட்பட மூவர் பலி
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை அடுத்த பிச்சநந்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40),இவரது மனைவி பவித்ரா (30). இவர்களுக்கு ரித்திக் (9) என்ற மகனும், நித்திகா ஸ்ரீ (7) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று காலை பவித்ரா தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கினர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சிறுமி நித்திகா ஸ்ரீ கிணற்றில் பிணமாக மிதந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார், ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் கிடந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் காக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?