திருமண விழாவிற்கு சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் காட்டுப்பாட்டை இழந்து விபத்து

கள்ளக்குறிச்சியில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக நேற்று (மே 13) இரவு கன்னியாகுமரிக்கு தனியார் பேருந்தில் 45 பேர் கொண்ட குழு சென்ற நிலையில் இன்று (மே 14) அதிகாலை 5.30 மணியளவில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்பாராதவிதமாக 20 அடி பள்ள கிணற்று தடுப்பணையில் மோதி விபத்துக்குள்ளானது.இந்நிலையில், அதில் பயணம் செய்த முகிலன் (13), அண்ணாமலை (58), சக்திவேல் (53), வேலாயுதம் மனைவி மின்னல் கொடி (33), விக்னேஷ் மனைவி அனுசியா (27) உள்பட 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






