திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல்; போலீஸ் தடியடி
செங்கம்: திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குபட்ட செங்கம் டவுன் 18வது வார்டு ஆனைமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்குசாவடி அருகே திமுக கிளை செயலாளர் சுரேஷ் மீது அங்கு வந்த பாமகவினர், 'சில நாட்களாக நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது எதற்காக திமுகவிற்கு வாக்கு சேகரித்தாய்' எனக்கேட்டு சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி தேன்மொழி வெற்றிவேல் தலைமையிலான போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்று கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அவர்கள் கலைய மறுத்ததால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
What's Your Reaction?