தர்மபுரி மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 8.97 லட்சத்திற்கு ஏலம்

Mar 21, 2025 - 13:36
 0  9
தர்மபுரி மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 8.97 லட்சத்திற்கு ஏலம்

தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com,BL., அவர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. தருமபுரி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.பாலசுப்பிரமணியன், அவர்கள் முன்னின்று நடத்திய இந்த ஏலத்தில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்துகொண்டு மொத்தம் உள்ள 82 வாகனங்களில் 70 வாகனங்கள் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். 70 வாகனங்கள் ரூ.8,97,008/- (எட்டு லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எட்டு ரூபாய் மட்டும்)க்கு பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டன. ஏல தொகை ரூ.8,97,008/-யை அரசு வங்கியில் கணக்கில் செலுத்தப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow