மது போதையில் முதியவரை தாக்கிய 4 பேர் கைது

Apr 17, 2024 - 03:39
 0  7
மது போதையில் முதியவரை தாக்கிய 4 பேர் கைது

செங்கல்பட்டு ஜேசிகே நகரை சேர்ந்தவர் தாமோதிரன் (62). இவர், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலம் அருகே நேற்று மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் இருந்த 4 பேர் தாமோதரனை பாட்டிலால் தாக்கினர்.இதுகுறித்து தாமோதரன் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து செங்கல்பட்டு கே.கே.தெருவைச் சேர்ந்த மோகன் (30), மக்கான் சந்து பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (25) உட்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow