நடுரோட்டில் வண்டியை வழிமறித்து ரூ.33 லட்சம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் பகுதியில் 33 லட்சம் ரூபாய் பணத்துடன் பைக்கில் சென்ற முருகன், வானமாமலை ஆகியோரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற நிலையில் கொள்ளை குறித்து அவர்கள் நாங்குநேரி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தியதில் வாகைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 27 லட்சம் ரூபாய் வரை பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






