மகளைக்கொன்ற கள்ளக்காதலன்; அதிர்ச்சியில் தாய் செய்த அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகர் அருகேயுள்ள சாகம்பரி என்ற இடத்தில் கீதா வசித்து வருகிறார். இவரது மகள் அனுஷா (வயது 25).இவருக்கும், கொரகுண்டே பாளையத்தைச் சேர்ந்த சுரேஷுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. விழா அமைப்பாளர் நிறுவனத்தில் சுரேஷ் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு செல்லும் போது அனுஷாவுடன் சுரேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சுரேஷுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தாலும், அனுஷாவுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதற்கிடையில், அனுஷா சுரேஷுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேச அனுஷாவை சுரேஷ் அழைத்ததாக தெரிகிறது. அவரும் இதற்கு சம்மதித்து அதன்படி நேற்று மாலை அனுஷா ஜே.பி.நகர் அருகே உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். சுரேஷும் அங்கு வந்துள்ளார். தன் மகள் திடீரென விட்டில் இருந்து வெளியே செல்வதை அறிந்த கீதாவும் பின்தொடர்ந்தார். இந்நிலையில் பூங்காவில் சுரேஷ், அனுஷா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அனுஷாவை குத்தியுள்ளார். அனுஷாவைப் பிந்தொடர்ந்து வந்த கீதாவை பார்த்து சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். அதே சமயம் அனுஷாவை சுரேஷ் கத்தியால் குத்தினார். மகளை காப்பாற்ற கீதா அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து சுரேசின் தலையில் பலமுறை அடித்தார். இதனால் சுரேஷ் தலையில் காயம் ஏற்பட்டு மண்டை உடைந்து கீழே விழுந்தார்.இதற்கிடையில், அனுஷா பலத்த கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல, சுரேஷுக்கும் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஜே.பி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அனுஷா, சுரேஷ் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அனுஷாவின் தாய் கீதாவையும் பிடித்து விசாரித்தனர்.அப்போது அனுஷாவுக்கும் சுரேசுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. மேலும் சுரேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதால், அனுஷா அவருடனான உறவை விட்டுவிட்டு செல்ல முடிவு செய்துள்ளார். ஏனென்றால் அனுஷாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இந்த விவகாரம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் சுரேஷ் அனுஷாவுடனான தன்னுடடைய உறவை தொடர வற்புறுத்தி வந்துள்ளார். கள்ளத்தொடர்பை அனுஷா மறுத்ததால், சுரேஷ் அவரை கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது. அதே நேரத்தில் சுரேஷிடம் இருந்து தனது மகளை காப்பாற்ற கீதா கல்லால் தலையில் அடித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த இரட்டை கொலை சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






