கொள்ளை அடிக்க காத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது; போலீஸ் விசாரணை

Mar 26, 2025 - 02:37
 0  2
கொள்ளை அடிக்க காத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது; போலீஸ் விசாரணை

சிவகங்கை அருகே சித்தலூர் விலக்கு பகுதியில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கும்பல் சந்தேகத்திற்கு இடமாக பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற சிவகங்கை தாலுகா ஆய்வாளர் கணேச மூர்த்தி தலைமையிலான போலீஸார் சோதனையிட்டதில் அங்கு பதுங்கியிருந்தது திருப்புனம் அருகே மேலராங்கியத்தைச் சேர்ந்த வேல்முருகன் (35), பெரியகோட்டையைச் சேர்ந்த ராமையாராஜன் (37), சிவகங்கையைச் சேர்ந்த பாண்டி (36), கருப்புச்சாமி (42), வானக்கருப்பைச் சேர்ந்த நாடிமுத்து (41) என்பது தெரியவந்தது.விசாரணையில், அவர்கள் சிவகங்கை பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்தது அம்பலமானது.அவர்களிடமிருந்து வாள்,முகமூடி, கையுறை,அரிவாள்,மிளகாய் பொடி பாக்கெட்,கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ததுடன் அங்கிருந்த 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow