ஜெபம் நடத்துவதாக கூறி பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த கிறிஸ்துவ மத போதகர்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கெனிட்ராஜ் (47). இவர் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையில் போதகராக உள்ளார். இவரது வீட்டின் கீழ்தளத்தில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வரும் 26 வயதுடைய இளம்பெண்ணிடம், ''உங்களுக்கு பிசாசு பிடித்துள்ளது, அதனால் ஜெபிப்பதற்காக சபைக்கு வரவேண்டும்'' என கெனிட்ராஜ் கூறியுள்ளார்.இதையடுத்து அந்த பெண் அவரது சபைக்கு சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணிடம் கெனிட்ராஜ் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், வீட்டுக்கு சென்ற கெனிட்ராஜ், தனது மனைவி, பிள்ளைகள் வெளியே சென்றிருப்பதாகவும் இப்போது தனது வீட்டிற்கு வந்தால் ஜெபித்து அனுப்புவேன் என்றும், இல்லையென்றால் உன் கணவர், பிள்ளைகளை கொலை செய்து விடுவேன் என்றும் அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதுகுறித்து இளம் பெண் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து மத போதகரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?