சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி.அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை சிறுமி, பால் சொசைட்டிக்கு சென்று பால் ஊற்றிவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியிடம் கடையில் போண்டா வாங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்றார். பின்னர் அங்குள்ள கன்னி கோயில் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அப்பகுதிக்கு வந்து சிறுமியை மீட்டனர்.இதுகுறித்து சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சிறுவன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






