கொழுக்கட்டைக்காக 14 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை

Aug 31, 2025 - 14:02
 0  20
கொழுக்கட்டைக்காக 14 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் EB சாலையில் வசிப்பவர் முனுசாமி. இவரது மகள் மோகனபிரியா(14).அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை மோகனபிரியா தன் தாயாரிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் நாளைக்கு செய்து தருகிறேன் எனக் கூறியதால் விரக்தி அடைந்த மாணவி திடீரென வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow