ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை; மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் வைசாலி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கமல் (28). இவர் நேற்று இரவு கடம்பத்தூர் பஜார் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ராஜ்கமலை பின் தொடர்ந்து சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இரண்டு இடங்களில் தப்பித்த ராஜ்கமலை மர்ம நபர்கள் விடாமல் துரத்திச் சென்று 3-வது இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.அப்போது தப்பிக்க முயற்சி செய்த ராஜ்கமலை மர்ம நம்பர்கள் ஓட,ஓட விரட்டி சென்று தலை,கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர். மேலும் ராஜ்கமலை வெட்ட முயன்றவர்களை தடுக்க சென்ற ஒருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடம்பத்தூர் போலீஸார் ராஜ்கமலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






