உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 6 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்

Apr 11, 2024 - 20:02
 0  32
உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 6 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதின் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாளவாடி அடுத்த கொள்ளேகால் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சரக்கு வேனில் வந்த சித்தநாயக்கா (21) என்பரிடம் சோதனை நடத்தியதில் ரூபாய் 6 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow