தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்கச் சென்ற தனியார் கம்பெனி மேலாளர் பரிதாப பலி

Sep 1, 2025 - 14:16
Sep 1, 2025 - 15:59
 0  20
தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்கச் சென்ற தனியார் கம்பெனி மேலாளர் பரிதாப பலி

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி ரகுராமையா இவரது மகன் ஜோதி கிருஷ்ணா காந்த் (வயது 30).இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒகேனக்கல் வந்துள்ளனர். ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு குளிக்க சென்றுள்ளனர்.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் நண்பர்கள் 4 பேரும் தடையை மீறி சின்னாறு பரிசல் துறை அருகே உள்ள மணல்மேடு காவிரி ஆற்றில் குளித்தபோது ஜோதி கிருஷ்ணா காந்த் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.அப்போது இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டனர்.இருவரும் சத்தம் போடவே அருகில் இருந்த நண்பர் ஒருவரை மட்டும் காப்பாற்றியுள்ளார்.ஜோதி கிருஷ்ணா காந்தை காப்பாற்ற முடியவில்லை.நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.உடனடியாக ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் போலீசார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஜோதி கிருஷ்ணா காந்த் உடலை மீட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow