எல்ஐசி ஊழியர் மீது தாக்குதல்; பீர் வாங்கி தர மறுத்ததால் போதை ஆசாமிகள் அட்டூழியம்
கோவை அருகே உள்ள பூசாரி பாளையம் பட்டப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (27). இவர் எல்.ஐ.சி ஊழியராக வேலை செய்து வருகிறார்.கோபிநாத் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அதே பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேர் அவரை டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கி வரும்படி கூறியுள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கோபிநாத் மறுத்து விட்டார்.ஆத்திரமடைந்த 3 பேரும் இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர். மேலும், அவரை கீழே தள்ளி விட்டு தாக்கியுள்ளனர். கோபிநாத் இதில் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில், கோபிநாத்தை தாக்கிய நபர்கள் அவரது வீட்டிற்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இது குறித்து கோபிநாத் செல்வபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோபிநாத்தை அடித்து உதைத்து வீட்டை தாக்கி சேதப்படுத்தியதாக பூசாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (35), ஆனந்த் (31), கௌதம் (36) ஆகியோரை கைது செய்தனர்.
What's Your Reaction?