மசாஜ் பண்ண போனா மஜா பண்ணலாமா..? 8 பேர் கைது ஒருவருக்கு போலீஸ் வலை
கோவை, அடையார்பாளையம் சிவாஜி காலனியை சேர்ந்தவர் செல்வம், 26. இவர், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் அருகே உள்ள தனியார் பேக்கரி முன் நின்று கொண்டிருந்தார்.அங்கு வந்த ஒரு இளைஞன் எதிரில் ஆயுர்வேத மசாஜ் மையம் உள்ளது. அதில் பல அழகிகள். தங்கள் விருப்பப்படி வேடிக்கை பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கே வரிசையாக நின்றிருந்த அழகிகளைப் பார்த்து அதிர்ந்தார் செல்வம். உடனே ஏடிஎம்மில் பணம் எடுப்பதாக கூறிவிட்டு ஓடிவிட்டார். பின்னர் கோவை சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆயுர்வேத மசாஜ் மையத்துக்கு விரைந்து வந்து உள்ளே நுழைந்தனர். மசாஜ் சென்டரில் சுமார் 7 அழகிகளுடன் மேலாளர் உட்பட 8 பேர் இருந்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். சோதனையில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வந்ததை உறுதி செய்தனர்.விசாரணையில் மகேஷ் மசாஜ் சென்டர் நடத்தி வருவது தெரியவந்தது. அந்த ஆயுர்வேத மசாஜ் மையத்தின் மேலாளராக திருச்சி மாவட்டம் முல்லை வாசல் பகுதியை சேர்ந்த முகிலன் (23) என்பவர் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து பெண்களை கோவைக்கு வரவழைத்துள்ளனர். கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் மசாஜ் சென்டரில் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களை மசாஜ் சென்டருக்கு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாட்ஸ்அப்பில் பார்த்து ஆசையோடு வருபவர்களுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள். உள்ளே நுழைந்ததும், அவர்களிடம் இருந்து அழகிகள் விருப்பப்படி பணம் வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவருக்கு ரூ.2,500 முதல் ரூ.20,000 வரை கிடைத்தது.பல ஆண்கள் தங்களின் எல்லா பணத்தையும் இழந்துள்ளனர். வெளியில் சொல்ல முடியாததால் மனவேதனையுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது. சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 அழகிகள், ஒரு ஆண் உள்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளர் மகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?