குடிபோதையில் காவலரை தாக்கிய புதுமைப்பிள்ளை; தட்டி தூக்கிய போலீசார்

May 3, 2024 - 05:03
 0  10
குடிபோதையில் காவலரை தாக்கிய புதுமைப்பிள்ளை; தட்டி தூக்கிய போலீசார்

மதுரை மாவட்டம் பழங்காந்தம் பகுதியில் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் குமரேசன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக போதையில் வாகனத்தை ஓட்டி வந்த அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மற்றும் அவரது நண்பரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது காவலாளியை திடீரென தாக்கி அருகில் உள்ள கடையின் ஷட்டரில் தள்ளினர். மேலும் கீழே இருந்த கல்லை எடுத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. போதை ஆசாமி தாக்கியதில் சுயநினைவை இழந்த காவலரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.மேல் சிகிச்சைக்காக அழகப்பன் நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து காவலரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நபர் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் செய்து கொள்ள இருந்த புதுமைப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow