மனைவியை மிரட்ட பெற்ற குழந்தையை பிளேடால் அறுத்த தந்தை

Apr 19, 2024 - 09:10
 0  16
மனைவியை மிரட்ட பெற்ற குழந்தையை பிளேடால் அறுத்த தந்தை

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழதோட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சிவரஞ்சனி (30). இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் தன்ஷிகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக சிவரஞ்சனி சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து வர மிரட்டுவதற்காக, தனது மகள் தன்ஷிகாஸ்ரீயின் கையை பாலசுப்ரமணியன் பிளேடால் வெட்டினார். ரத்தம் வெளியேறுவதை வீடியோவில் காட்டுமாறு கூறி குழந்தையை சித்ரவதை செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பினார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியனின் தாயார் அவரை தடுத்து நிறுத்தினார். அவரையும் துஷ்பிரயோகம் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். காயம் அடைந்த சிறுமியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த போலீசார் பின்னர் காப்பகத்தில் விட்டு சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow