கம்பெனி முன் மயங்கி விழுந்த பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகர்; வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூதப்பாடி சமத்துவபுரம் காலனியை சேர்ந்தவர் சித்ரா (39). கூலி தொழிலாளி. இவர் பூதப்பாடி பஸ் ஸ்டாப்பில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி நுழைவு வாயிலில் வெப்பம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.இதை பார்த்த அதிமுக பிரமுகரான ஹாலோ பிரிக்ஸ் உரிமையாளர் கவின், மயங்கி கிடந்த சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த சித்ராவை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கூலித்தொழிலாளியை தாக்கியதாக கவின் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எஸ்சி. எஸ்டி பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அதிமுக பிரமுகர் கவின் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?