ஆற்காடு அருவி 22 சவரன் நகை பறிமுதல்
ஆற்காடு டவுன் போலீசார் நேற்று இரவு அண்ணா சிலை அருகில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை நிறுத்தி விசாரித்ததில் மேல்விஷாரத்தைச் சேர்ந்த நவீன், ஐயப்பன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் பல்வேறு இடங்களில் திருடியது தெரிந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
What's Your Reaction?