காவல் ஆய்வாளர் வீட்டில் கைவரிசை;250 சவரன் நகை,5 லட்சம் ரொக்கம் கொள்ளை

May 11, 2024 - 16:39
May 12, 2024 - 04:20
 0  12
காவல் ஆய்வாளர் வீட்டில் கைவரிசை;250 சவரன் நகை,5 லட்சம் ரொக்கம் கொள்ளை

மதுரை:அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.இன்று காலை வீட்டை திறந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார்250 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதுதொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் வீட்டிலேயே நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow