பள்ளி வாகனத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஆரியூர் நெய்க்காரன்பட்டியை சேர்ந்தவர் அசோகன்(54). இவர் நாமக்கல் அருகே மோகனூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஓட்டிச்செல்லும் வேனில் பள்ளிக்கு வந்து செல்லும் 7 வயது சிறுமிக்கு, அசோகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், இன்ஸ்பெக்டர் வேதப்பிரவி, அசோகனிடம் விசாரணை நடத்தினார். பின்னர், அவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
What's Your Reaction?