சிறுமியிடம் சில்மிஷம்; பாதரியார் கைது

ராணிப்பேட்டை ஏரித்தெருவில் சர்ச் இயங்கி வருகிறது. இந்த சர்ச்சை நடத்தி வரும் பாதிரியார் ரகுராஜ்குமார் (54).கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்ச்சுக்கு வந்த 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் பாதிரியார் ரகுராஜ்குமார் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என கூறியுள்ளார். வீட்டிற்கு சென்ற சிறுமி கவலையாக இருந்ததை பார்த்து தாய் விசாரித்தபோது, சிறுமி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுததை அடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பாதிரியார் ரகுராஜ்குமார் தலைமறைவாகிய நிலையில் முத்துக்கடையில் பதுங்கியிருந்த பாதிரியாரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?






