9 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளம் பெண் கைது

Jun 13, 2024 - 14:42
 0  21
9 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளம் பெண் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பல்லவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த முனிஸ்வரீ (27) என்ற பெண் திருமணம் முடித்து கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், முனீஸ்வரி போடி அருகே தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் இல்ல காப்பகத்தில் தங்கி பயின்று வந்துள்ளார்.இதையடுத்து இங்கு பணிபுரியும் முனீஸ்வரி தொடர்ந்து இரவு நேரத்தில் 9 வயது பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் இச்சிறுவன் அந்த இல்ல காப்பகத்தில் இருந்து போடி சில்லமரத்துபட்டி பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்திற்கு மாற்றப்பட்டார்.அதன் பின்பு அந்த சிறுவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உடல்நிலை சோர்வாகவே இருந்துள்ளார். இதை புதிதாக சேர்ந்த இல்ல காப்பகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் விசாரித்ததில், அந்த சிறுவன் தனக்கு முனீஸ்வரி என்ற பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறியதாக தெரிகிறது.இதையடுத்து இந்த பிரச்சனை தேனி குழந்தைகள் நல அலுவலர் விஜயலட்சுமிக்கு தெரிய வர அவர்கொடுத்த புகாரின் பேரில், போடி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முனீஸ்வரி(27) என்ற பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow